யாழ்ப்பாணப் புகையிரதப்பாதை அமைப்பின்போது வெடிக்காத குண்டென்று மீட்கப்பட்டுள்ளது
யாழ்ப்பாணப்புகையிரதப்பாதை அமைப்பின் போது வெடிக்காத நிலையில் உள்ள வெடிகுண்டென்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யாழ்.புகையிரத நிலையத்திலிருந்துசுமார் 4 கிலோமீற்றர் தூரத்திலேயே இக்குண்டைக்கண்டு பிடித்ததாக தெரியவருகின்றது.
பளைக்கும் காங்கேசன் துறைக்கும் இடையிலான புகையிரதப்பாதையை அமைக்கும் இந்திய நிறுவனம் ஒன்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டு தனது பணிகளை தற்போது ஆரம்பித்து வருகின்றது.
இதன்படி முதற்கட்டமாக புகையிரதப்பாதை அமைப்பதற்கான ஆரம்ப்பணிகள் நடைபெற்றுவருகின்றன.இதற்காக ஏற்கனவே இருந்த புகையிரதப்பாதைகள் தற்போது துப்பரவு செய்யப்படுகின்றன.
இவ்வாறு து;பபரவு செய்யும் போதே நேற்றைய தினம் இக்குண்டைக்கண்டு பிடித்துள்ளனர். இது தொடர்பில் இச்சம்பவ இடத்திற்கு வருகை தந்த இலங்கை இராணுவத்தின் பொறியியல் பிரிவினர் குறித்த குண்டை எடுத்து செயலிழக்கச்செய்துள்ளனர்
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட குண்டானது கடந்த யுத்தகாலத்தில் ஏவப்பட்ட ஒன்று என்பதோடு ஆர்.பி.ஜி ரக குண்டென்றும் இராணுவத்தினர் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment