ஆர்பாட்டக்காரர்களிடமிருந்து தப்புவதற்காக மெய்ப் பாதுகாவலரை கட்டியணைத்த ஆஸி பிரதமர்!
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற கோபமான எதிர்ப்பாளர்களின் மத்தியில் இருந்து அவுஸ்திரேலியப் பிரதமரான ஜூலியா ஹில்லார்ட் அவர்கள் மெய்ப் பாதுகாப்பு வீரரின் அசாத்தியச் செயலால் உயிர் ஆபத்தில் இருந்து தப்பியுள்ளார்.
Australia Day என்று அழைக்கப்படும் விருது வழங்கும் நிகழ்வு ஒன்றில் அவுஸ்திரேலியப் பிரதமர் பங்கேற்ற வேளை திடீரென எதிர்ப்பாளர்கள் சூழ்ந்து கொண்டதால் தான் பதற்ற நிலை உருவானது.
குறித்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவரான Tony Abbott உம் கலந்து கொண்டார்.
எதிர்ப்பாளர்களுக்கு இடையில் நடந்த தள்ளு முள்ளில் ஜூலியா ஹில்லார்ட்டின் ஒரு காலணியைக் காணவில்லை.
உடனடியாகச் செயற்பட்ட மெய்ப்பாதுகாப்பு வீரர் ஒருவர் ஜூலியா கில்லார்டை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு கார் நிற்கும் இடத்துக்குச் சென்றார்.
200 க்கும் மேற்ப்பட்ட எதிர்ப்பாளர்கள் கலந்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டு கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டது.
காட்சியை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.
0 comments :
Post a Comment