முன்னாள் போராளிகளை அரசு ஒருபோதும் கைவிடாது- புனர்வாழ்வு அமைச்சர் கஜதீர
முன்னாள் போராளிகளை நாம் ஒரு போதும் கைவிடமாட்டோம் என்றும் அவர்களுக்குரிய சகல வசதிகளையும் செய்து கொடுப்போம் என்று சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திர சிறி கஜதீர தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற முன்னாள் போராளிகளுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
யாழ்.அரச முகவர் திருமதி இமெல்டா சுகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்
முன்னாள் பேராளிகள் சமூகத்தில் இணைந்துள்ளனர். அவர்கள் தற்போது பல்வேறு பிரச்சனைகளையும் எதிர்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நாம் அறிவோம் அவற்றை தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை நாம் விரைவில் மேற்கொள்வோம்.
நீங்கள் எங்களைத் தேடி வராவிட்டாலும் நாங்கள் உங்களைத் தேடி வருவோம். உங்களுக்கான சகல உதவிகளையும் மேற்கொள்ள அரசாங்கம் தாயராக உள்ளது.
மேலும் சமாதானத்தை கட்டியெழுப்பும் நண்பர்கள் எனும் தலைப்பில் முன்னாள் போராளிகளை இணைத்து அமைப்பு ஒன்றை உருவாக்கவுள்ளோம். இதன் மூலம் அவர்களுக்கான உதவிகளையும் மேற்கொள்ளவுள்ளோம்.
எதிர்வரும் 2013ம் ஆண்டில் வடக்கின் அபிவிருத்திக்காக மட்டும் 252 மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் வடபகுதி முற்றாக அபிவிருத்தி செய்யப்படும் என்றார்.
0 comments :
Post a Comment