புனர்வாழ்வு பெற்ற புலிகளைக் கொண்டு சேற்று நண்டுவளர்ப்புக்கு திட்டமிடும் ஆளுநர்.
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் எல்ரிரி உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தினை அபிவிருத்தி செய்யும் நோக்குடன யாழ்.ஊர்காவற்துறையில் சேற்று நண்டு வளர்ப்புத் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க யாழ் ஆழுநர் திட்டமிட்டுள்ளார். யாழ். ஊர்காவற்துறையில் சேற்று நண்டு வளர்ப்புத் திட்டம் ஆரம்பிப்பது தொடர்பாக யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் உப அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி தலைமையில் நடைபெற்றது.
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் எல்ரிரி உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தினை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் அரசாங்கம், கூட்டுறவு சமூகங்கள், பாதுகாப்பு படையினர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.
உற்பத்திகள் தொடங்கியதும் கூட்டுறவு சந்தைகளினூடாக இவை ஏற்றுமதி செய்யப்படும். இத்திட்டத்திற்காக ரூபா 16.74 மில்லியன் கடனடிப்படையில் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
வட மாகாண பிரதம செயலாளர் திருமதி.ர.விஜயலட்சுமி, ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவன், வட மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் திருமதி.ம.வசந்தகுமார், வட மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் யு.சுபசிங்க, யாழ் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் வி.கே.அருந்தவநாதன் ஆகியோர் இதில் கலந்து கொண்டார்கள்.
0 comments :
Post a Comment