Thursday, January 26, 2012

மண்ணாகிப்போன மலரின் வாழ்க்கை! குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா?

யாழ்ப்பாணம் தனங்களப்பிலுள்ள பற்றையென்றலிலுள்ள மண் அணையின் பக்கதிலிருந்து பெண்ணொருவருடைய எலும்புகள் நேற்றைய தினம் (25-01-2012) அன்று மீட்கப்பட்டது. வேட்டைக்குச் சென்றவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இவ்வெலும்புக் கூடுகள் மீட்கப்பட்டன. இதுவரையில் நடைபெற்ற விசாரணைகளின் போது சடலமாக மீட்கப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த செல்வி அற்புதமலர் வயது 25 என அடையாளங்காணப்பட்டுள்ளார்

இவரது மரணம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் பல கருத்துக்களை கூறிவரும் நிலையில் உண்மை தொடர்பாக விளித்துக் கூறமுடியாது விட்டாலும் நடந்த சம்பவங்களைப் பார்க்கின்றபோது இச் செயலை திட்டமிட்ட ஒரு குடும்பல் ஒன்றே செய்துள்ளது. என்று தெளிவாகின்றது.

குறிப்பாக மரணமான இப்பெண் கடந்த நவம்பர் மாதம் 29ம் திகதி வீட்டிலிருந்து வெளியே சென்றபின்னர் வீடு திரும்பவில்லை. இவரை இவரது உறவினர்கள் தேடிவந்த நிலையில் இவர் மன்னரில் இருப்பதாக ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

குறித்த பெண் கடைசியாகச் செல்லும் போது கொண்டு சென்ற கையடக்கத் தொலைபேசி எண்ணிலிருந்து வந்த அழைப்பில் கதைத்த ஆண் ஒருவர் தாம் அப்பெண்ணை திருமணம்செய்து விட்டதாகவும் தானும் அப்பெண்ணும் எதிர்வரும் மாதங்களில் யாழ்ப்பாணம் வருவதாகவும் கூறி அழைப்பை துண்டித்து விட்டார்.

இந்நிலையில் குறித்த தொலை பேசி இலக்கத்துடன் தொடர்ந்து கொள்வதற்கு உறவினர்கள் மேற்கொண்ட முயற்சியானது பலனளிக்காத நிலையில் அவர் உயிருடன் உள்ளார் என்ற திருப்தியில் அவர்கள் காத்திருந்துள்ளனர்.இதன் பின்னர் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் எலும்புக் கூடுகள் மீட்கப்பட்ட இடத்தில் விதியாசமான முறையில் எலும்புகள் இருப்பதையும் பெண்ணொருவருடைய ஆடைகள் அங்குமிங்குமாக சிதறி இருப்பதையும் அப்பகுதிக்கு சென்ற மாடுகளை மேய்க்கும் ஒருவர் கண்டு மக்களிடம் சொல்லியுள்ளார்.

இந்நிலையில் தான் காணாமல் போன பெண்ணின் உறவினர்களும் அங்கு சென்று பார்த்தபோது அதிர்ந்து போயினர்.காரணம் அங்கு அவர்களின் மலரின் உடைகளும் காலணிகளும் கலைந்தும் சிதறியும் போய்க்கிடந்துள்ளது. சுதாகரித்துக்கொண்டு சென்று அவர்கள் பரிசோதனை செய்து பார்த்துபோது அது அவருடையது என்று உறுதியாகியுள்ளது.



இதனைத் தொடர்ந்தே அவர்கள் நடந்தவற்றை ஒரளவு அறிந்து கொண்டனர். இப்போது மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது கிடைத்த இறுதியான தகவலின் படி யாழ்.சட்ட வைத்தியஅதிகாரி தெரிவிக்கையில் குறித்த பெண் கூட்டாகச் சேர்ந்த ஒரு குழுவினால் கற்பளிக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் அவர்கள் அச்சடலத்தை அங்கேயே விட்டுச்சென்றிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்ததோடு சடலம் மழை காலத்தில் நீரில் அடித்துச்செல்லப்பட்டு பின்னர் அங்குள்ள வாய்க்கால் ஒன்றில் மிதந்து சென்று போக் ஒன்றில் நின்றுள்ளதாகவும் தெரிவித்தோடு அதனை பன்றி தின்னுள்ளதாகவும் கூறினார்.

இப்போது பொலிஸாரின் விசாரணைகள் நடைபெற்றுவரும் நிலையில் உண்மையிலேயே இப்பெண் பணத்திற்காக கொல்லப்படவில்லை என்பது புலனாகின்றது காரணம் இப்பெண்ணின் வீடு மிகவும் சிறிய ஒரு கொட்டி இப்போது தான் வீட்டுத்திட்டத்தில் வீடு கட்டப்படுகின்றது.
எனவே இவர் திட்டமிடப்பட்டு கற்பிற்காக மட்டும் ஒரு குழவினால் கொலை செய்யப்பட்டுள்ளார். என்பது புலனாகின்றது அத்தோடு இப்பாத செயலில் ஈடுபட்டவர்கள் சந்தேகம் வரக் கூடாது என்பதற்காகவே இடையில் தொலை பேசியில் தொடர்பு ஏற்படுத்தி திருமணம் என்ற கதையையும் கட்டி விட்டுள்ளனர்.

உண்மையிலேயே யுத்ததினால் விதவைகளால் நிறைந்துள்ள இப்பகுதியிpல் இவ்வாறான சம்பவங்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியல் பெரும் அச்சத்தைதோற்றுவித்துள்ளது என்பதோடு இவ்வாறான செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் சட்டத்தினால் தண்டிக்கப்படவேண்டும். அப்போது தான் இந்த சமூதாயம் நல்வழிப்படும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com