சிவராம் கொலை வழக்கு ஒத்திவைப்பு
சிரேஷ்ட ஊடகவியளாளர் தர்மரத்தினம் சிவராமின் கொலை வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இவ்வழக்கின் முக்கிய சாட்சியாளர்கள் ஆறுபேர் நீதிமன்றத்திற்கு வருகை தராமை காரணமாக வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.
குறித்த முக்கிய சாட்சிகள் ஆறுபேரும் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காத நிலையில் வழக்கு விசாரணையை மேற்கொள்ள முடியாது என அரசதரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இந்நிலையில் வழக்கு விசாரணைகளை ஒத்திவைக்கும் படியும் அவர் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.
அரச வழக்கறிஞரின் கோரிக்கைக்கு இணங்க வழக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி பி.சூரசேன உத்தரவிட்டுள்ளார்.
இன்றைய தினம் சமூகமளிக்க தவறிய முக்கிய சாட்சிகள் ஆறுபேரையும் அடுத்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் குழாம் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு அவர் மேலும் உத்தரவிட்டார்.
ஊடகவியளாளர் தர்மரத்னம் சிவராம் 2005ஆம் ஆண்டு கொல்லப்பட்டமைக்கு ஆறுமுகம் ஸ்ரீஸ்கந்தராஜா என்று அழைக்கப்படும் பீட்டர் என்பவர் மீதே வழக்கு தொடரப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment