Thursday, January 5, 2012

சிஹான் ஹிரோசிஒடா தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு விஜயம்.

சோட்டோக்கன் கராத்தே தோ கென்சிக்காயின் கிரண்ட் மாஸ்டரும், பங்களாதேஸ் தேசிய கராத்தே அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளரும், சர்வதேச பயிற்றுவிப்பாளருமான ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சிஹான் ஹிரோசிஒடா நாளை வெள்ளிக்கிழமை (06.01.2012) தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்கின்றார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்யும் இவர் பல்கலைக்கழகத்தின் கராத்தே மாணவர்களுக்கும், கிழக்கு மாகாண சோட்டோக்கன் கராத்தே தோ கென்சிக்காயின் மாணவர்களுக்கும் பல்கலைக்கழக அரங்கில் பயிற்சிகள் வழங்கவுள்ளார்.

அத்துடன் கொழும்பில் உள்ள சோட்டோக்கன் கராத்தே தோ கென்சின்காயின் வீரர்களுக்கு
பயிற்சிகள் வழங்கவுள்ளதுடன், தரப்படுத்தல் பரீட்சையையும் நடாத்தவுள்ளார்.

குருணாகல், கண்டி, அனுராதபுரம் போன்ற இடங்களுக்கும் சென்று பயிற்சி வழங்கவுள்ளதாக கராத்தே போதனாசிரியரும், சோட்டோகன் கராத்தே தோ கென்சிக்காயின் கிழக்குமாகாணப் பொறுப்பாளருமான முகம்மத் இக்பால் தெரிவித்தார்.

...............................

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com