Friday, January 6, 2012

துருக்கி வெளிவிவகார அமைச்சர், ஈரானுக்கு விஜயம்.


ஈரானின் அணுவாயுத திட்டங்கள் தொடர்பாகவும், ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடாத்தும் நோக்கிலேயே, துருக்கி வெளிவிவகார அமைச்சர் அஹ்டேக் தவ்கொத்ளு, ஈரானுக்கு விஜயம் செய்துள்ளார். தலைநகர் தெஹ்ரானை நேற்று சென்றடைந்த துருக்கி வெளிவிவகார அமைச்சர், ஈரான் வெளியுறவு அமைச்சர் அலி அக்பர் சலாஹ்வை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியதாக, ஈரான் செய்திகள் தெரிவிக்கினற்ன.

ஈரான் அணுவாயுத திட்டங்களுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆகியன தடை விதிக்க நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து, துருக்கி வெளிவிவகார அமைச்சர் ஈரானுக்கு விஜயம் செய்துள்ளமை, குறிப்பிடத்தக்கதாகும்.

இதேநேரம், அமெரிக்கா ஈரானுக்கு எதிராக பொருளாதார தடை விதிப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சியை, சீனா வன்மையாக கண்டித்துள்ளது. ஈரானுக்கு எதிராக தடைகளை விதிப்பது பிரச்சினைக்கு தீர்வு அல்லவென, சீன வெளியுறவு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

ஈரான் அணுவாயுதங்களை உற்பத்தி செய்வதாக, அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதனால் அமெரிக்க மத்திய வங்கியின் கொடுக்கல் வாங்கல்களை இடைநிறுத்தி, ஈரானுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க, அமெரிக்கா தயாராகி வருகிறது. அமெரிக்காவின் இந்த தீர்மானத்திற்கு பிரிட்டனும் கனடாவும் ஆதரவு தெரிவித்த போதிலும், பல நாடுகள் இதனை கண்டித்துள்ளன.

இதேநேரம் இவர் ஈரான் பாதுகாப்பு கவுண்சலின் பிரதானியையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதை படத்தில் காண்கின்றீர்கள்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com