ஜனாதிபதி உட்பட மூவரை கொலை செய்ய திட்டமிட்ட புலிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டினர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இருவர் மீது இன்று (09) சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கனகரத்தினம் ஆதித்தியன், கந்தவனம் கோகுல்நாத் ஆகியோர் மீதே கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை எதிர்வரும் பெப்ரவரி 13 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
2009 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதிக்கும் நவம்பர் மாதம் 1 ஆம் திகதிக்குமிடையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டினர் என இவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment