Wednesday, January 11, 2012

மேர்வினை அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கவில்லையேல் பதவி விலகுவோம்

களனி தொகுதியின் சிறிலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் பதவியில் இருந்து, அமைச்சர் மேர்வின் சில்வாவை நீக்க வேண்டும். இல்லையேல், தாங்கள் பதவி விலகவிருப்பதாக களனி மற்றும் பேலியகொட உள்ளுராட்சி மன்றங்களின் 16 அரச தரப்பு உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர்.

மேர்வின் சில்வாவுடன் தொடர்ந்தும் பணியாற்ற முடியாது என்ற நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும், இது தொடர்பில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிடம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் , களனி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமைச்சர் மேர்வின் சில்வா, முன்னேஸ்வரம் காளி கோவிலில் நடைபெறவிருந்த மிருகபலி பூஜையை குழப்பி அடித்தமைக்கான பலனை தற்போது அனுபவிப்பதாக, அந்த ஆலயத்தின் பூசகர் காளிமுத்து சிவபாதசுந்தரம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு களனி பிரதேச சபை அங்கத்தவர்கள் தெரிவித்த முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணை நடத்தியபின் அவருக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com