Thursday, January 26, 2012

பிரதி அமைச்சர் சந்திரசிறி சூரியாராச்சி விபத்தில் சிக்கி காயம்

சமூக சேவைகள் பிரதி அமைச்சர் சந்திரசிறி சூரியாராச்சி ஹபரணை ஹிரிவடுன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார்.

இன்று அதிகாலை மூன்று மணியளவில் பிரதியமைச்சர் பயணம் செய்த வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் சிறு காயங்களுக்கு உள்ளான பிரதி அமைச்சர் சிகிச்சைகளுக்கென பொலன்னறுவை வைத்தியசாலையில் 20 ம் இலக்க வாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் பிரதி அமைச்சரின் கை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment