எதிர்வரும் காலத்தில் புலிகளை பிரதிபலிக்கும் எந்த முத்திரைக்கும் இடமில்லை. பிராண்ஸ்
எல்ரிரிஈ முத்திரையொன்றை வெளியிட்ட சம்பவம் தொடர்பில் பிரான்ஸ், இலங்கையிடம் மன்னிப்பு கோரியுள்ளது. குறித்த முத்திரையை வெளியிட்ட லா போஸ்டே எனப்படும் நிறுவனம் இது தவறுதலாக இடம்பெற்றதாக பிரான்ஸிலுள்ள இலங்கை தூதரகத்திடம் தெரிவித்துள்ளது.
இம்முத்திரைகளுக்கு பிரான்ஸ் அரசாங்கமே அங்கீகாரம் வழங்க வேண்டும். ஒரு சில எல்ரிரிஈ ஆதரவு குழுக்கள் பிரபாகரனின் உருவம் பொறித்த முத்திரையொன்றை லா போஸ்டே நிறுவனத்தின் ஊடாக வெளியிட்டுள்ளது. பாரிய பிரசாரத்தை மேற்கொண்டு இம்முத்திரைகளுக்கு அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ள எல்ரிரிஈ ஆதரவு குழுக்கள் முயற்சி எடுத்து வருகின்றனர். லா போஸ்டே நிறுவனம் இவ்விடயம் தொடர்பாக பிரான்ஸிலுள்ள இலங்கை தூதகரத்திடம் மன்னிப்பு கோரியுள்ளதுடன் எதிர்காலத்தில் எவ்வித எல்ரிரிஈ அடையாளங்களை பயன்படுத்தி முத்திரை வெளியிட போவதில்லையென தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment