Thursday, January 19, 2012

நாட்டை பாதுகாத்த வீரர்களுக்கு ஜனாதிபதியினால் பல்வேறு செயற்திட்டங்கள்-பிரதமர்

யுத்தத்தின் போது தமது உயிரையும் உடல் அங்கங்களையும் தியாகம் செய்த இராணுவ வீரர்களதும் பொலிஸாரினதும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் வைபவம் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. இன்நிகழ்வில் கருத்துத்தெரிவித்த பிரதமர் டி.எம்.ஜயரத்ன

'நாட்டையும் நாட்டுப் பிரஜைகளையும் பாதுகாப்பதற்காக தமது உயிரையும் உடல் அங்கங்களையும் தியாகம் செய்த இராணுவ வீரர்களைப் பாராட்டி அவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தாமல் இருக்க முடியாதென்ற காரணத்தினால் ஜனாதிபதி பல்வேறு செயற்திட்டங்களான வீடமைப்பு வசதி, காணிவசதி சுயதொழில் வசதிகள் பேன்ற பல்வேறு செயற் திட்டங்தளை நடைமுறைபடுத்தி அவர்களை கௌரவப்படுத்தும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்களையும் ஜனாதிபதி நடைமுறைபடுத்தி வருகின்றார்.'

அத்துடன் அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில் ' எம்மிடம் உள்ள பணத்தை சிறந்த முறையில் நாம் பயன்படுத்த வேண்டும். ஆனால் சிலர் தம்மிடம் உள்ள பணத்தை போதை பொருள் பாவனை கொலை, கொள்ளை, தற்கொலை என்று பல்வேறு தீயவழிகளில் பயன்படுத்தி பலவேறு பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்றனர். எனவே இப்புலமைப் பரிசில் பணத்தை முறையாகப் பயன் படுத்திக் கொள்ளவேண்டும் என தெரிவித்தார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com