Friday, January 27, 2012

பிள்ளைகளை பார்ப்பதற்கு அவசியமுள்ளது எனவே பிணை வழங்குக-சக்வித்திவின் மனைவி

சட்டத்துக்கு புறம்பான வகையில் நிதிநிறுவனம் ஒன்றை நடத்தி வாடிக்கையாளர்களின் 1060 மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சக்வித்தி ரணசிங்கவின் மனைவி குமாரி அனுராதனி இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பிணை மனு வொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்தப் பண மோசடியுடன் எவ்விதத்திலும் தாம் தொடர்புபட்டிருக்கவில்லை என மனுவில் சக்வித்தி ரணசிங்கவின் மனைவி குறிப்பிட்டுள்ளடதுடன் இந்தப் பிணை மனுவில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வணிக விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி, மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

அத்துடன் தற்போது தாம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பிள்ளைகள் நீதிமன்றத்தின் பொறுப்பில் இருப்பதாகவும் அவர்களைப் பார்ப்பதற்கு தமக்கு அவசியமுள்ளதால் பிணை வழங்குமாறும் மனுவின் ஊடாக அவர் நீதிமன்றத்திடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இதற்கமைய பிரதிவாதிககளை அடுத்த மாதம் 27 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் அறிவித்தல் விடுத்துள்ளது.

No comments:

Post a Comment