மாணிக்க கல் வியாபாரியிடம் கொள்ளையிட்ட பொலிஸ் அதிகாரி உட்பட மூவர் கைது.
மாவனல்லை கிரிங்கதெனிய பகுதியில் மாணிக்க கல் வர்த்தகர் ஒருவரின் வீட்டினுள் தம்மை ரகசியப் பொலிஸார் என அறிமுகப்படுத்தி நுழைந்த கோஷ்டி அங்கிருந்து கோடி ரூபாய்கள் பெறுமதியான மாணிக்க கற்களை கொள்ளையிட்டுச் சென்றனர்.
குறிப்பிட்ட கொள்ளை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட மாவனல்லை பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் மாவனல்லை, ஹெம்மாதகம பகுதியை சேர்ந்த, ஹெம்மாதகம பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் அதிகாரி உட்பட இரு முச்சக்கரவண்டி சாரதிகளையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட 4 கோடி ரூபாவிற்கும் மேற்பட்ட பெறுமதியுடைய ஒரு தொகை மாணிக்க கற்களை, பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியின் வீட்டுத்தோட்டத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இப்பொருட்கள் மீட்டகப்பட்டுள்ளது.
இதேநேரம் ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருள், மஹரகமையில் வைத்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன்போது ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா பணமும், இரண்டு செல்லிட தொலைபேசிகளும் கைப்பற்றபபட்டதாக, மஹரகம பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண்ணொருவர், கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது, அவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட முற்றுகையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹெரோயின் பக்கற்றுக்களுடன் சந்தேக நபர் ஒருவரும், கைது செய்யப்பட்டனர்.
0 comments :
Post a Comment