கடனட்டைகள் தொடர்பாக அவதானமாக இருப்பீர்! பொலிஸார் வேண்டுகோள் ..
பொரலஸ்கமுவ பகுதியில் உள்ள நவீன சந்தையொன்றில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக, போலி கடனட்டையை பயன்படுத்தியமை தொடர்பாக, கைது செய்யப்பட்ட சந்ததேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது மற்றையவர்களின் கடனட்டைகளின் தகவல்களை மாற்றியமைத்து, பொருட்களை கொள்வனவு செய்யும் மோசடி தொடர்பான தகவல்கள் அம்பலமாகியுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண இவ்விடயம் தொடர்பில் பாவனையாளர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொரஸ்கமுவவில் கைது செய்யப்பட்ட சந்தேக மேலதிக விசாரணைக்காக குற்றத்தடுப்பு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர், இந்த மோசடியுடன்; தொடர்புடைய மேலும் 5 சந்தேக நகர்கள் கைது செய்யப்பட்டனர். கடனட்டைகளை பயன்படுத்துபவர்களின், கடனட்டை இலக்கம் மற்றும் ஏனைய தகவல்களை திரட்டி, போலி கடனட்டைகளை தயாரித்து, அதன்மூலம் பொருட்களை கொள்வனவு செய்தமை, தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக திட்டமிட்ட ஒரு குழுவினர் செயற்பட்டு வந்துள்ளனர். இதனால், தமக்குரிய கடனட்டைகள் தொலைந்துவிட்டால், அது தொடர்பாக கூடிய கவனம் செலுத்துமாறும், அத்துடன் தமக்குரிய கடனட்டைகளை தம்வசமே வைத்திருக்குமாறும், பொது மக்களிடம் நாம் வேண்டுகோள் விடுக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடனட்டைகள் தொலைந்து விட்டால், அது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, உடனடியாக அறிவிக்கவும். தமது நிலுவைகளை அறிந்து கொண்டதன் பின்னர், கிடைக்கின்ற சிட்டையை எறிந்து விடாது, தம்வசம் வைத்துக்கொள்ளுமாறும், கேட்டுக்கொள்கிறோம். மாதந்தோறும் தமது கடனட்டையின் நிலுவைகளை பரிசீலனை செய்து கொள்ளுங்கள். இதனால், கடனட்டைகளை பயன்படுத்துவோர், இது தொடர்பாக கூடிய கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு மோசடிகளில் ஈடுபடும் நபர்களின் சூழ்ச்சிகளில் சிக்காமல் இருப்பதற்கான வழி வகைகளை மேற்கொள்ளுமாறும், நாம் பொது மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment