Saturday, January 28, 2012

முல்லைத்தீவில் அரச காணிகளை அபகரிக்கும் முயற்சியில் முஸ்லீம் வர்த்தகர்-மக்கள் கொதிப்பு

முல்லைத்தீவு சின்னாற்றுப் பகுதியின் ஒரு பகுதியை முஸ்லீம் வர்த்தகர் ஒருவர் வலுக்கட்டாயமாக கைப்பற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிய வந்துள்ளதோடு அமைச்சர் ரிசாத் பதியூதினின் ஆதரவாளர்என்று தன்னை அடையாளப்படுத்தி பொது மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றார்.

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் பின்னால் உள்ள கடலுடன் கலக்கும் சின்னாற்றின் ஒரு பகுதியை முஸ்லீம் வர்த்தகர் ஒருவர் வலுக்கட்டாயமாக பிடித்து வேலிகளை அமைத்ததோடு வீடு ஒன்றையும் கட்டினார்.

இந்நிலையில் இது தொடர்பாக பிரதேச செயலகமும் பொது அமைப்புகளும் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைகளை கருத்திற் கொண்டு நீதிமன்றினால் இதற்கு தடையுத்தரவு பிறப்பிறப்பட்டதோடு அவ்வாறு காணிகளை அபகரிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்றைய தினம் இரவு நேரம் குறித்த பகுதிக்கு வந்த வர்த்தகரும் அவரது அடியாட்களும் அகற்றப்பட்ட வேலியை மீண்டும் போட்டதோடு வீட்டையும் அமைத்துள்ளனர் என்று தெரியவருகின்றது.

தன் கைப்பற்றும் நிலத்தை நிரவி அதனுள்ளே பாரிய கட்டிடங்களை அமைக்கும் முயற்சியில் இவர் ஈடுபட்டவுள்ளார் என்றும் தெரியவருகின்றது.

குறிப்பாக இவர் தன்னை அமைச்சர் ரிசாத் பதியூதின்; ஆதரவாளர் என்று அடையாளப்படுத்தி வருகின்றதோடு தட்டிக்கேட்க முயன்ற பொது மக்களையும் அச்சுறுத்தி வருகின்றார்.

இதனால் பொது மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளதோடு இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இவ் ஆறு மூடப்பட்டால் மழை காலத்தில் முல்லை நகாலிருந்து வெள்ள நீர் வெளியேறாதது என்றும் தெரிவித்துள்ளனர்.






No comments:

Post a Comment