ஆயுள் வேத வைத்தியம் என்று பெண்ணொவரை உலக்கையால் அடித்து கொன்ற வைத்தியர்
மேலதிக சிகிச்சைகள் மேற்கொண்டால் உயிருக்கு ஆபத்து என்று யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் ஆலோசனை கூறிய நோயாளி ஒருவரை குணப்படுத்துவதாக கூறி, ஆயுள் வேத வைத்தியம் என உலக்கையால் அடித்து கொலை செய்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் மூளாயில் கடந்த 26 ம் திகதி இடம்பெற்றுள்ளது. இதில் கந்தரோடையைச் சேர்ந்த என்.தனரூபி வயது 33 என்ற பெண்ணே இவ்வாறு மரணமானவராவார்.
இவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் முதுகு எலும்பு பகுதியில் ஏற்பட்ட வலிகாரணமாக சிகிச்சை பெறச்சென்றபோது இவரை பரிசோதனை செய்த வைத்தியநிபுணர்கள் முதுகில் கல்வியம் படிந்துள்ள இவரது நோய் முற்றிவிட்டதென்று தெரிவித்துள்ளனர்.
அத்தோடு மேலதிக சிகிச்சைகள் மேற்கொண்டால் உயிருக்கு ஆபத்தென்றும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆயுள் வேத வைத்தியம் என்று தெரிவித்து இவரை குணப்படுத்துவதாக கூறி கையையும் காலையும் கட்டி உலக்கையால் முதுகில் அடித்து வைத்தியர் வைத்தியம்செய்துள்ளார்.
இதன்போது எலும்புகள் முறிந்து குறித்த் பெண் உயிரிழந்தார். இவரை மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் அனுமதித்த போதும் மேலதிக சிகிச்கை பலனின்றி அவர் வைத்தியசாiலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார்.
இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் இனுவில் பகுதியிலும் நபர் ஒருவர் தவறான ஆயுள் வேத சிகிச்சை காரணமாக உயிரிழந்து விட்டார் என்றும் தெரியவருகின்றது.
இதேவேளை இவ்வைத்தியர் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டுமென்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
1 comments :
Ayurverdic and other forms of medical treatments are only an eyewash. Western medical treatment is the guaranteeded and secured. Because, in western medicine they do lot of researches and they test the medicine in number of ways and if they found it effective and safe only it come to the market. This is 21st Century and even now if anyone go after any medical treatment other than Western and Scientific medical treatment, it is their baby. A systematically planned awareness should be created among people as a whole. Even well educated people go after these non western medicine and finally lose their lives. This is really a pathetic situation.
Post a Comment