இரு வார காலத்தினுள் நுரைச்சோலை அனல் மின்நிலையம் திறக்கப்படும்
கடந்த 18 ஆம் திகதி தொழிநுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட நுரைச்சோலை அனல் மின்நிலையத்தினை திறப்பதற்கு மேலும் இரு வார காலம் செல்லும் என இலங்கை மின்சார சபை சபையின் தலைவர் பேராசிரியர் விமலதர்ம அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.
இயந்திரக் கட்டமைப்பினை முற்றாக செயலிழக்கச் செய்து, அதனைக் குளிர்ப்பித்ததன் பின்னரே திருத்தப்பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர் இதற்கு சுமார் எட்டு அல்லது 10 நாட்கள் செல்லும் என தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment