Wednesday, January 25, 2012

டக்ளசுக்கு வைப்பாட்டியாக இருந்த சிவகீதா இரு குழந்தைகளையும் பெற்றுக்கொடுத்தாராம்.

மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் குறித்து அமெரிக்க தூதரகத்துக்கு கிடைத்து உள்ள தகவல்கள் மிகவும் அதிர்ச்சி ஊட்டுவனவாக அமைந்திருந்தாக கொழும்பிலிருந்து அமெரிக்க ராஜாங்க திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தாக விக்கிலீக்ஸ் தெரிவிக்கின்றது.

இது தொடர்பாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலில் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகீதா பிரபாகரனுக்கு இன்னும் ஒரு பெயர் உண்டு. பத்மினி தேவானந்தா என்பது. இவர் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் ஆசை நாயகியாக இருந்தவர். இரு குழந்தைகளை டக்ளஸ் தேவானந்தாவுக்கு பெற்றுக் கொடுத்து இருக்கின்றார். குழந்தைகள் தேவானந்தாவுடன் உள்ளார்கள். தேவானந்தா தற்போது சிவகீதாவுடன் இல்லை.

சிவகீதாவுக்கு கருணாவுடனும் நெருக்கம் இருந்தது என கூறப்படுகின்றது. ஆனால் சிவகீதாவின் பெயரில் வருகின்ற பிரபாகரனுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் சம்பந்தம் எதுவும் கிடையாது.

சிவகீதாவுக்கும் கனகசபை பிரபாகரன் ( மகேஸ் ) என்பவருக்கும் 2001 இல் திருமணம் இடம்பெற்று இருக்கின்றது.

இருவரும் 2007 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை சந்தித்தனர். 6 வருடங்களுக்கு முன் திருமணத்தில் இணைந்தனர் என்று கூறி உள்ளனர்.

3 comments :

விந்தன் சுவிஸ் ,  January 25, 2012 at 4:12 PM  

தோழா தோழா இது தகுமா தோழா ? அப்ப சோபாவின் கதை என்ன ? தோழா தோழா இது மட்டுமா இன்னும் இருக்குதோ தோழா தோழா

விந்தன் ,சூரிச், சுவிஸ்.

theneer pookal January 25, 2012 at 4:31 PM  

(:::::::::) இணையத்துக்கு என் ஆதங்கமான கருத்து. நீங்கள் புத்திஜீவிகளா புறம் கூறும் ஜீவிகளா…???

மனிதனுக்கு மற்றைய மனிதனைப் பற்றி தூற்றி பேசித்திரிவதில் இருக்கும் சுய இன்பம் எல்லையில்லாதது போலிருக்கிறது. வள்ளுவரும் இவர்களைப் போன்றவர்களை நன்கு அறிந்திருந்திருக்கிறார் என்பது அவரின் இநதக் குறளைப்பார்க்கும் போது புரிகிறது.

அறம் கூறான், அல்ல செயினும், ஒருவன்
புறம் கூறான் என்றல் இனிது.

இதன் பொருள்: நல்லறத்தை ஒழுகாது இருப்பினும் கூட புறம் சொல்லாமை எனும் ஒரே ஓர் ஒழுக்கம் இனிமையைக் கொடுக்கும் என்பதாகும்.

எம்மில் பலர் மனச்சாட்சியின்றியும், தீர விசாரிக்காமலும், ஆதாரங்கள் இன்றியும் மற்றவரை நோக்கி பல விடங்களுக்கு கைவிரலை நீட்டுகிறோம். ஆனால் எப்போதாவது நாம் பேசுவதற்கு முன் சில வினாடிகளாவது நமது செயலை அல்லது பேசும் பொருளைப் பற்றி ஒரு சுயவிமர்சனம் செய்து கொள்கிறோமா? சுய விமர்சனம் என்பது பற்றி என்று மேடை போட்டு பேசும் புத்திஜீவிகளும் தமக்கு என்று வரும் போது சுயவிமர்சனத்தை மறந்து விடுகிறார்கள் என்பதை எனது அனுபவங்கள் காட்டிப்போகின்றன.

பேசுவதற்கு தலைப்பு இல்லாது போகும் போது ஒரு மனிதனையே தலைப்பாக எடுத்து பேசித்திரிகிறோம். இன்னொருவரைப் பற்றி நாம் பேசும் பேசும் போது எவ்விதமான சுயவிமர்சனமும் இன்றி வளையும் நாக்கின் போக்கில் பேசித்திரிவதின் அபாயம் பற்றி பலரும் சிந்திப்பதில்லை. அல்லது பேச்சின் சுவராஸ்யம், பொறாமை, காழ்ப்புணர்ச்சி போன்றவை பலரை சுயவிமர்சனம் இன்றி மற்றவரைப் பற்றி பேசவைக்கிறது. இந்த விதத்தில் இந்த செய்தியே இங்கு விளம்பரப்படுத்தும் பல இளையதளங்கள் பல அரசியல் உள்நோக்கங்களை மனதில் வைத்தே செயல்படுகிறது என்பதை நாம் அறிவோம்::: பதவிகளில் இருக்கும் தனி ஒருவரை தெரிவு செய்யும் பொது இவ்வாறான கருத்துக்களும் விமர்சனங்களும் ஆண்டாண்டாக வருவது வழமைதானே... விக்கி லீக்ஸ்! போன்ற இணையதளங்களின் உண்மைத்தன்மை என்பது 100 விகிதம் உறுதி செய்யமுடியாது. அது தனது பதிவுகளை அடிக்கடி மாற்றிக்கொள்ளும் என்பதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும். தேநீர் பூக்கள்

Anonymous ,  January 25, 2012 at 5:44 PM  

புலிகளுக்கு எதிராக போராடி இன்றும் உயிருடன் இருக்கும் டக்லஸ் பற்றி அமெரிக்க தூதரகம் பல "பலான" செய்திகள்
அனுப்பி அவற்றை வெளிநாட்டுப் புலிகள் காவிக் கொண்டு திரிவது தெரியும். ஆனால் புலிகளின் கொடுமைகள் பற்றியோ, சித்திரவதைக் கூடங்கள் பற்றியோ எந்த தகவலும் கிடையாது. தவிர புலிகளால் நிர்மாணிக்கப்பட்ட ஏழு விமான ஓடு பாதைகள் பற்றி எந்த சிங்கனும் வாய் திறக்கவில்லை.

டக்ளசுக்கு எதிராக குண்டுகள் வைத்து பயனில்லை என்றவுடன் இப்படியான மோசடிகளில் அமெரிக்க தூதரகம் இறங்கியுள்ளது. ஏனென்றால் டக்ளசால் மட்டுமே அமெரிக்க சீ ஐ எ உளவாளிகளைக் கைது செய்ய முடிந்தது. அதுவும் யாழ்ப்பாணத்தில் சமூக சேவகர்கள் என்ற போர்வைக்குள் பதுங்கியிருந்து கொண்டு புலிக் கும்பலுக்கு வாரியிறைத்த "அலன்' தம்பதிகளை டக்லஸ் பிடித்ததை அமெரிக்க பயங்கரவாதிகளால் எப்படி ஜீரணிக்க முடியும்? எங்களுடைய தமிழ் சூரர்கள் இதுவரையில் இந்த "அமெரிக்க" உளவாளிகள் யாழ் நகரில் எதற்காக முகாமிட்டனர் என்று ஆராயக் காணோம்.

மொத்த சனத் தொகையில் ஐந்து சதவீதமும் இல்லாத யாழ்ப்பாணத்தவர்கள் 70 சதவீதம் சிங்களவர்களை "அமுக்கலாம்" என்று ஆயுதம் தூக்கியது அமெரிக்க நலனுக்கே தவிர தமிழர்களின் எந்தப் பிரச்சனையும் தீர்க்க அல்ல என்பதற்கு இந்த "கொசிப்ப்பும்" ஒரு ஆதாரம்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com