பரீட்சை பெறுபேறுகளை நிராகரிப்பது மணவர்கள் அல்ல, அரசியல்வாதிகளே
பரீட்சை பெறுபேறுகளை நிராகரிப்பது, பாடசாலை மாணவர்களன்று, குறுகிய அரசியல் இலாபத்துடன் செயற்படும் அரசியல் கட்சிகள் என, கல்வியமைச்சர் பந்துல குணவர்தன வலியுறுத்தியுள்ளார். குருநாகல், மளியதேவ மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், சகல பிள்ளைகளுக்கும் பெறுமதிமிக்க மனித வாழ்வு உள்ளது. பல்லாயிரக்கணக்கானோர், பல்லலைக்கழக வரத்தினை பெற்று, பல்கலைக்கழகத்திற்கு பிரவேசிக்கின்றனர். இம்மாணவர்களுக்கு சிறிதளவேனும், கடந்த உயர்தர பரீட்சைகளில், அநீதிகள் இடம்பெறவில்லை.
இன்று பரீட்சை பெறுபெறுகளையும், அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்தி போலி பிரசாரங்களையும், அடிப்படையற்ற தகவல்களையும் வெளியிடுகின்றனர். பெறுபேறுகளை நிராகரிப்பது மாணவர்களல்ல. ஒரு சில அரசியல் கட்சிகளே, இதனை நிராகரிக்கின்றன. இதுவொரு, கவலைக்குரிய நிலை என அவர் கூறினார்.
550 லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட சகல வசதிகளும் கொண்ட இரு மாடி நடன மண்டபத்தினை திறந்து வைக்கும் இந்நிகழ்வில் அமைச்சர் ரி.பி. ஏகநாயக்க, பிரதியமைச்சர் ஜயரட்ன ஹேரத், வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ ஆர். பலல்ல உள்ளிட்டோரும், இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment