எல்.கே. டொமேன் பெயரில் பதிவு செய்யப்பட்ட இணைய எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது
நாளாந்தம் குறைந்தபட்சம் 20 இணையத்தளங்கள் புதிதாக பதிவு செய்யப்படுவதாகவும் இதற்கான கேள்வி அதிகரித்துச் செல்வதாகவும் எல்.கே. டொமேன் பதிவாளர் பேராசிரியர் கிஹாண் டயஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எல்.கே. டொமேன் பெயரில் பதிவு செய்யப்பட்ட இணையத்தளங்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை கடந்துள்ளதாகவும்,நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருந்து இணையத்தளங்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கிடைப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment