Tuesday, January 17, 2012

ஜே.வி.பி. கிளர்ச்சி குழுவுக்கு யாழ்ப்பாணம் செல்ல தடை

துண்டுபிரசுரங்களை விநியோக்கும் போராட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற ஜே.வி.பி.யின் கிளர்ச்சி குழு உறுப்பினர்கள் சிலரை பொலிஸார் வவுனியாவில் தடுத்து வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஜே வி பி கிளர்ச்சிக் குழுவின் உறுப்பினர்களான யாழ்ப்பாணத்தில் காணாமல் போன லலித் மற்றும் குகன் ஆகியோரை கண்டுபிடித்து தருமாறு கோரி இன்று யாழ்ப்பாணத்தில் நடத்தப்படும் துண்டுபிரசுரங்களை விநியோக்கும் போராட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக கிளர்ச்சி குழு உறுப்பினர்கள் சிலர் யாழ்ப்பாணம் சென்போதே, இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்குமார தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com