இளவயது கர்ப்பத்திலும் யாழ் மாவட்டம் முதலிடம்!
இலங்கையில் இளவயதில் கர்ப்பம் தரிக்கும் விகிதம் தற்போது அதிகரித்து வருகின்றது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றிலிருந்து யாழ் மாவட்டம் இவ்விடயத்தில் முதலிடத்திலுள்ளதாக புள்ளவிபரங்கள் ஊர்ஜிதம் செய்துள்ளது. யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ அறிக்கைகளின் பிரகாரம் கடந்த ஆண்டில் 408 பேர் பதின்ம வயதில் கர்ப்பம் தரித்துள்ளனர்.
யாழ்ப்பாணப் பிரதேச செயலக பிரிவில் 70 பேர் பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவில் 50 பேரும் சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 64 பேரும் இளவயதில் கர்ப்பம் தத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க எண்ணக்கைகளாகும்.
இதேநேரம் வேலணை, நெடுந்தீவு, காரைநகர், மருதங்கேணி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் இவ்வாறான இளவயது கர்ப்பம் தொடர்பான எவ்வித நிகழ்வுகளும் பதிவாகவில்லை என தெரியவருகின்றது.
இவ்வாறான இளவயது கர்ப்பங்களை தடுத்து நிறுத்த சமூக ஆர்வலர்கள் முன்வர வேண்டும் என்பதுடன் ஒழுக்க சீலர்களான தாயத்தை கட்டி வளர்க்கவும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் தெவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment