டொல்பின் மீனின் இறைச்சியை விற்பனை செய்ய முயன்ற இருவருக்கு அபராதம்
கொல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ள டொல்பின் மீனின் இறைச்சியை விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட பிரதிவாதிகள் இருவருக்கு நீர்கொழும்பு மேலதிக நீதவான் துலானி எஸ் . வீரதுங்க தலா 7500 ரூபா அபராதம் விதித்தார்.
நீர்கொழும்பு கடற்கரையோரத்தில் டொல்பின் மீனை கொன்று, அதன் இறைச்சியை கடல் பன்றியின் இறைச்சி என்று கூறி விற்பனை செய்யப்படுவதாக நீர்கொழும்பு பொலிஸ் நிலைய சுற்றாடல் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து பொலிசார் சுற்றிவளைப்பை மேற்கொண்டு பிரதிவாதிகள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
0 comments :
Post a Comment