இந்தியாவின் சைக்கிளை வைத்து மிரட்டி அரசியல் செய்யும் ஈ,பி..டி.பி- அதிகாரிகள் மௌனமாயினர்
இந்திய அரசினால் வழங்கப்படும் துவிச்சக்கர வண்டிகளை வைத்து மிகவும் கேவலமான ஒரு அரசியலை ஈ.பி.டி.பி மேற்கொண்டு வருவதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளதோடு இவ்வாறான செயற்பாடுகளுக்கு அரச அதிகாரிகளும் துணைபோவதாக கவலை தெரிவித்துள்ளனர்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண மக்களுக்கு 10 ஆயிரம் துவிச்க்கர வண்டிகளை வழங்க இந்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்திய அரசினால் வழங்கப்படும் 10 ஆயிரம் துவிச்சக்கர வண்டிகளுக்கான பயனாளிகள் தெரிவினை பிரதேச செயலகங்கள் மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையில் உட்புகுந்த ஈ.பி.டி.பி தனக்கு இசைவானவர்களையும் தனது கட்சிக்கு வேண்டியவர்களுக்கும் துவிச்சக்கர வண்டிகளை வழங்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக நேற்றைய தினம் பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட பகுதிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களை தமது கட்சி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு பிரதேச செயலகத்தை வற்புறுத்தியதைத் தொடர்ந்து அவர்கள் இத்தகவலை மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
இதன்படி நேற்று காலை 10 மணியளவில் பொது மக்கள் கட்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளதாக தெரியவருகின்றது. இவ்வாறு இந்திய அரசின் துவிச்சக்கர வண்டிகளை வைத்து மிகவும் கேவலமாக அரசியலை ஈ.பி.டி.பி மேற்கொண்டு வருவதாகவும் இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுகம் கேட்பராற்று விட்டிருப்பதாகவும் அவர்கள் விசனம் தெரிவித்தனர்.
மேலும் இவற்றை அரசாங்கம் தட்டிக்கேட்க வேண்டும் என்றும் குறிப்பாக பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு இவ்வுதவிகள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும அவர்கள் கேட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment