நெடுஞ்சாலை குற்றச்செயல்களைத்தடுப்பதற்கு விஷேட பொலி படைப்பிரிவு
நெடுஞ்சாலைகளில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுக்க விசேட படைப்பிரிவை கடமையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு பல்வேறுபட்ட அநீதிகள் மற்றும் வாகனங்களினால் இழைக்கப்படும் குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டோரை கைது செய்வதற்காக விசேட படையினரை சேவையில் ஈடுபடுத்த நடவடிககை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இப்படைப்பிரிவிற்கு தேவையான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்செயல்களை புரிந்துவிட்டு தப்பியோடியவர்கள் தொடர்பான சகல தகவல்களையும் துரிதமாக ஒளிப்பதிவு செய்து கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்
குற்றச்செயல்கள் இடம்பெற்ற இடத்திற்கு பொலிஸார் செல்ல முன்னர், இப்படைப்பிரிவு அங்கு விரைந்து செல்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டோரை பின்தொடர்ந்து சென்று அவர்களை கைது செய்வதற்கு துரித ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பொலிஸ் தலைமையகம், குற்றச்செயல்களை தடுக்கும் பிரிவு உள்ளிட்ட சகல பிரிவுகளுடனும் இணைந்து இப்படைப்பிரிவு செயற்படவுள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment