சம்பந்தன் அகம்பாவம் கொண்ட பிடிவாதக்காரன்! அமெரிக்காவிடம் போட்டுக்கொடுத்தார் பத்மினி!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தரை அகம்பாவம் பிடித்த பிடிவாதக்காரன் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது பத்மினி சிதம்பரநாதன் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு தெரிவித்து இருக்கின்றார். போருக்கு பிந்திய சூழலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நகர்வுகள் குறித்து பத்மினியிடம் அமெரிக்க அதிகாரிகள் கேட்டு இருக்கின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை அழிந்த பிற்பாடு தமிழ் மக்களை தலைமை தாங்கி முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் வந்து உள்ளது என்றும் ஆனால் தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான தலைவர்கள் கூட்டமைப்பில் கிடையாது என்றும் பத்மினி முக்கியமாக சொல்லி இருக்கின்றார்.
தலைவர் சம்பந்தரைப் பற்றிச் சொன்னபோது தமிழ் மக்கள் சம்பந்தன் மீது கொஞ்சம் நம்பிக்கை வைத்து உள்ளனர். ஆனால் சம்பந்தன் பிரபுத்துவ மனோபாவம் கொண்டவர்.
இவரால் தமிழ் அரசியல் சக்திகளை ஒன்று சேர்க்க முடியாது. அகம்பாவம் பிடித்தவர், பிடிவாதக்காரர், கட்சியின் ஏனைய உறுப்பினர்களுடைய கருத்துக்களை செவிமடுக்கின்ற பண்பு இல்லாதவர்.
இதனால் கட்சித் தலைமை மீது உறுப்பினர்களின் அதிருப்தி அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. இவர் அதிகாரத்தை பகிர்ந்து கொடுக்க மறுக்கின்றமையும் அதிருப்தியை அதிகரித்துக் கொண்டு செல்கின்றது.
கூட்டமைப்புக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து பேச வேண்டும் என்று ஏனைய உறுப்பினர்கள் சம்பந்தனிடம் கேட்டு இருந்த போதும் சம்பந்தன் ஒரு போதும் இணங்கவில்லை என்று பத்மினி சொல்லி இருக்கின்றார்.
2009 ஆம் ஆண்டு ஜூலை 28 ஆம் திகதி கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த இரகசிய ஆவணம் ஒன்றில் இருந்து இத்தகவல்கள் வெளியில் வந்து உள்ளன.
0 comments :
Post a Comment