இந்திய மீனவர்கள் தொடர்பாக அப்துல் கலாமிமிடம் யாழ் மீனவர்கள் முறைப்பாடு.
இலங்கை வந்துள்ள இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி நேற்று யாழ் சென்றிருந்தபோது அவரைச் சந்தித்த யாழ் கடற்றொழிலாளர் சங்கங்களின் உயர்மட்ட பிரதிநிதிகள் இந்திய மீனவர்களால் தாம் எதிர்நோக்கி வரும் இடர்பாடுகள் தொடர்பாக எடுத்துரைத்தனர்.
குறிப்பாக ரோலர் மீன்பிடியால் கடல் வளங்கள் அழிக்கப்படுவதாகவும் இதனைக் கட்டுப்படுத்துவதன் ஊடாக கடல் வளங்களை பாதுகாக்க முடியும் எனவும் தமது எல்லைக்குள் அத்துமீறி வரும் இந்திய மீனவர்கள் தமது தொழில் வலைகளை அறுத்துச் செல்வதாகவும் இதனால் தமக்கு ஏற்படக் கூடிய பாதக நிலை தொடர்பாகவும் எடுத்து விளக்கினர்.
நெடுந்தீவு மீனவர்கள் தாம் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே தொழிலுக்குச் செல்வதாகவும் ஏனைய நாட்கள் தொழில்கள் செய்ய முடியாத நிலை உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர். இதேபோன்று வடமராட்சி மீனவர்களும் தாம் இந்திய மீனவர்களால் எதிர்கொண்டு வரும் இடர்பாடுகள் தொடர்பாக எடுத்து விளக்கியதுடன் மனுக்களையும் அப்துல் காலாமிடம் கையளித்தனர்.
இதன்போது இலங்கைக்கான இந்திய தூதுவர் அசோக் கே. காந்தா வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி, இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவர் வே.மகாலிங்கம் சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸவிதாரன பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ...............................
0 comments :
Post a Comment