இலங்கைக அரசு தவிர்ந்த எந்தக்குழுவுக்கும் இந்தியா உதவாது. கிருஷ்ணா
இலங்கை அரசாங்கத்தை தவிர வேறு எந்தவொரு குழுவிற்கும் ஒரு போதும் உதவ போவதில்லையெனவும், இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கப்போவதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
பிஸ்னஸ் ஸ்டேன்டட் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கைகக்கும் இந்தியாவிற்கும் இடையில் நிலவும் நீண்டகால உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு தொடர்ந்தும் தயாராக இருப்பதாக அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தனது செவ்வியில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பில்; இலங்கை மிகவும் இன்றியமையாத ஒரு நாடாகும். இந்து சமுத்திரம் தொடர்பாக இரு நாடுகளையும் பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. சிநேகபூர்வமான முறையில் அப்பிரச்சினைகளை தீர்ப்பதே இந்தியாவின் நோக்கம் எனவும் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைக்கு தொடர்ந்தும் உதவ இந்தியா தயாராகவுள்ளது. இதே வேளை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்திய உதவி திட்டத்தின் கீழ் வடக்கில் மேற்கொள்ளப்படும் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் முன்னேற்றங்களை கண்டறிவதே, அவரது இந்த விஜயத்தின் நோக்கமாகும்.
0 comments :
Post a Comment