பொலிசார் மிகவும் ஒழுக்கத்துடனும் பொறுப்புடனும் செயற்படவேண்டும்.பாதுகாப்பு செயலாளர்
அரசியல் உட்பட எந்தவொரு அழுத்தங்கள் வந்தாலும் சகல சந்தர்ப்பத்திலும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட பொலிசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொலிசார் தமது கடமைகளில் இருந்து விலகி செயற்பட முடியாது எனவும் சட்டத்தையும் ஒழுங்கையும் உரிய முறையில் நிலைநாட்ட பொலிஸ் திணைக்களம் முன்னெடுக்கும் சகல செயற்பாடுகளுக்கும் அரசாங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்கும் என பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பு -5 எல்விட்டிகல மாவத்தையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பொலிஸ் நிலையத்தை உத்தியோக பூர்வமாகத் திறந்து வைத்த நிகழ்விலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டு, இரண்டரைவருடம் கழிந்துள்ள நிலையில் தற்பொழுது சகலரினதும் கவனம் பொலிசாரின் பக்கம் ஈர்க்கப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் பொலிசார் மிகவும் ஒழுக்கத்துடனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும்.தற்போதைய சூழ்நிலையில் பொலிசாருக்கு மிகவும் பாரிய பொறுப்புக்கள் உள்ளன. எனவே மக்களும் அரசாங்கமும் எதிர்பார்க்கும் சிறந்த சேவைகளை பொலிசார் வழங்க முன்வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
.
0 comments :
Post a Comment