கென்ய அரசியல் வாதிகள் மீது சர்வதேச நீதிமன்றம் குற்றப் பத்திரிகை
கென்யாவில் 2007 அதிபர் தேர்தலை அடுத்து நடந்த இன மோதல்களின்போது மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைச் செய்ததாக அந்நாட்டின் நான்கு அரசியல் தலைவர்கள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
கென்யாவின் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடவிருந்த உஹுரு கென்யாட்டா, வில்லியம் ருடோ ஆகியோரும் குற்றம்சாட்டப்பட்டவர்களில் அடங்குவர்.
தேர்தல் முடிவு தொடர்பாக இனக்குழுக்கள் இடையே வன்முறைகளை தூண்டிவிட்டார்கள், மோதல்கள் நடக்க வழிசெய்தார்கள் என்று இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தேர்தல் வன்முறை வெறியாட்டம் கென்யாவில் 1992ல் பலகட்சி அரசியல் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அங்கு ஒவ்வொரு தேர்தலின்போதும் இனக் குழுக்கள் இடையிலான வன்முறை அரங்கேறுவதுண்டு.
ஆனால் 2007 தேர்தலின் பின்னர் அங்கு நடந்த வன்முறை வெறியாட்டம் என்பது முன்பில்லாத மிகப் பெரிய அளவில் இருந்தது.
அந்த மோதல்களில் குறைந்தபட்சம் 1200 பேர் உயிரிழந்திருந்தனர். சுமார் மூன்றரை லட்சம் பேர் இடம்பெயர நேர்ந்தது.
இந்த வன்முறைகளுக்காக கென்யாவில் இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை.
கென்யாவில் குற்றவாளிகள் தொடர்ந்தும் சட்டத்தின் பிடியில் சிக்காமல் இருக்கும் ஒரு நிலையை முடிவுக்கு கொண்டுவரவும், எதிர்காலத்தில் அந்நாட்டில் தேர்தல்கள் அமைதிகரமாக நடைபெறவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தித்தின் நடவடிக்கைகள் உதவும் என கென்ய மக்கள் பலர் நம்புகின்றனர்.
நன்றி பிபிசி
0 comments :
Post a Comment