சேதமடைந்த நாணய நோட்டுக்களை சேகரிக்கும் வேலைத்திட்டங்கள் ஆரம்பம்.
நாடெங்கும் காணப்படும் சேதமடைந்த நோட்டுக்களை சேகரிப்பதற்கென முன்னெடுக்கப்பட்டுள்ள விரிவான செயற்பாடுகளுக்கமைய, 10, 20, 50 ரூபா பெறுமதி கொண்ட நோட்டுக்கள், மத்திய வங்கியினால் மீள பெற்றுக்கொள்ளப்படுமென, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரங்களுக்குள் பாடசாலைகள், வர்த்தக கட்டிடத் தொகுதிகள் உள்ளிட்ட இவ்வாறான நோட்டுக்கள் கூடுதலாக புழக்கத்தில் உள்ள இடங்களை கேந்திரமாகக் கொண்டு, இவ்வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அழுக்கடைந்த நோட்டுக்கள் மீளப்பெறப்பட்டு, அவற்றுக்காக புதிய நோட்டுக்கள் வழங்கப்படுமென்றும், மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment