அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை! நாங்கள் சரியான பாதையிலேயே செல்கிறோம். ஒபாமா
சீன கம்யூ., கட்சியின் "சைனா டெய்லி' நாளிதழ் : ராணுவத்தின் அளவைக் குறைப்பதாக ஒரு பக்கம் சொல்லிக் கொண்டு, மறுபக்கம், ஆசிய பசிபிக் மண்டலத்தில் ஒபாமா ராணுவத்தைக் குவிக்கிறார். அமெரிக்காவின் இதுபோன்ற நடவடிக்கைகள் இருதரப்பிற்கிடையில் ராணுவப் பதட்டத்தையே உருவாக்கும். உலகின் பிற பகுதிகளை விட ஆசிய பசிபிக் மண்டலத்தில் அதிகளவிலான அமைதி நிலவுகிறது. அங்கு ஏன் அமெரிக்கா தனது படைகளைக் குவிக்க வேண்டும்? என்ற கேள்வியை அந்த பத்திரிகை எழுப்பியுள்ளது.
இதேநேரம் அமெரிக்காவின் பொருளாதாரம் சரியான வழியில் சென்று கொண்டிருப்பதாக அதிபர் பராக் ஒபாமா பெருமிதமாகக் கூறியுள்ளார். அமெரிக்காவில் கடந்தாண்டு வேலையில்லாத் திண்டாட்டம் 9.1 சதவீதமாக இருந்தது. இந்நிலையில், கடந்த இரு மாதங்களாக வேலை வாய்ப்பு அதிகரித்து வந்தது. கடந்தாண்டின் டிசம்பரில், கூடுதலாக இரண்டு லட்சத்து 12 ஆயிரம் வேலைவாய்ப்புகள் அதிகரித்தன. இதனால் வேலையில்லாத் திண்டாட்டம் 8.5 சதவீதமாக குறைந்தது.
இதுகுறித்து நேற்று முன்தினம் பேசிய அதிபர் ஒபாமா,"2005ல் இருந்து பார்க்கும் போது கடந்தாண்டு, அதிக எண்ணிக்கையில் தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. கடந்த 22 மாதங்களில், 32 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. அமெரிக்கப் பொருளாதாரம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. தொடர்ந்து, வேலைவாய்ப்புகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன' என்றார்.
0 comments :
Post a Comment