Friday, January 27, 2012

சீனா: பாதுகாப்பு பணி பெண்களுக்கு நீச்சல் உடை பயிற்சிக்கு எதிர்ப்பு

சீனாவில் தனியார் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பெண்களுக்கு நீச்சல் உடையில் பயிற்சி அளிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் “டியான்ஜியாவோ ஸ்பெஷல் சேப்டி கன்சல்டன்ட்ஸ் லிமிடெட்” என்ற நிறுவனம் செயல்படுகிறது.

இந்நிறுவனம் தனியார் நிறுவனங்கள், வி.ஐ.பி.க்களுக்கு பாதுகாவலர்களாக பணிபுரிய ஆட்களை தேர்வு செய்து அனுப்புகிறது.

இதற்காக 20 இளம்பெண்களுக்கு தற்போது பயிற்சி அளித்து வருகிறது. இவர்களில் பெரும்பாலானோர் கல்லூரி பட்டதாரி மாணவிகள்.

மொத்தம் 10 மாதம் பயிற்சி அளிக்கப்படுகிறது.இதன் ஒரு கட்டமாக சமீபத்தில் பிரபல சன்யா கடற்கரையில், இந்த இளம்பெண்களுக்கு நீச்சலுடையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

சரியாக பயிற்சி செய்யாத பெண்களை ஆண் பயிற்சியாளர்கள காலால் உதைப்பது,கனமாக மரத்தை தூக்கி செல்வது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இதற்கு சீனாவில் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் டுவிட்டரிலும் ஆயிரக்கணக்கானோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.












No comments:

Post a Comment