அமெரிக்க அதிபர் மாளிகை மீது குண்டு வீச்சு
அமெரிக்காவில் அதன் பொருளாதார நடவடிக்கைகளுக்கு எதிராக பல்வேறு நூதன போராட்டங்கள் நடந்து வருகின்றன. வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு என்று பெயரிடப்பட்ட போராட்டம் தற்போது வெவ்வேறு மாகாணங்களுக்கும் பரவி வருகிறது. Occupy DC என்ற பெயரில் நடத்தப்பட்ட போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வெள்ளை மாளிகை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது வெள்ளை மாளிகை மீது போராட்டாக்காரர்கள் புகைக் குண்டு வீசியதைத் தொடர்ந்து வெள்ளை மாளிகை உடனடியாக தற்காலிகமாக மூடப்பட்டது.
புகைகுண்டு வீசபட்ட போது அதிபர் ஒபாமா மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் உள்ளே இல்லை என கூறப்படுகிறது. புகை குண்டு வெள்ளை மாளிகையில் சுற்றுச்சுவரில் விழ்ந்ததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிகிறது.
அமெரிக்கா உலகெங்கும் அதன் வல்லாதிக்கத்தை நிறுவ, தனக்குப் பிடிக்காத நாடுகள் மீது குண்டு வீசி தாக்கி வரும் நிலையில் வெள்ளை மாளிகை மீது அந்நாட்டு மக்களாளாலேயே புகை குண்டு வீசப்பட்டிருப்பது அமெரிக்காவுக்கு அதிர்ச்சியான செய்தியாகக் கருதப்படுகிறது.
0 comments :
Post a Comment