இலவசக் கல்வியிலும், சுகாதார சேவையிலும் அரசாங்கம் கை வைக்காது- அமைச்சர் பசில்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருக்கம் வரை இலவசக் கல்வி மற்றும் சுகாதார சேவை என்பவற்றில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என்று 'தாமரைக் கோபுரம்' என்ற பெயரில் கட்டப்படவுள்ள தொலைத்தொடர்பு கோபுரத்துக்கான அடிக்கல்நாட்டும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இக்கருத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் இலவசக் கல்வியிலும், சுகாதார சேவையிலும் அரசாங்கம் கைவைக்கும் என்று தவறான வதந்திகள் பரவுகின்ற போதிலும்,மக்கள் அவை குறித்து எவ்வித அச்சமும் கொள்ளத்தேவையில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்றுமே ஒரே கொள்கையைக் கடைப் பிடித்துவரும் ஒரு தன்னிகரற்ற அரசியல் தலைவர் அவரது கொள்கைகள் என்றும் மாறிவிடமாட்டாது அத்துடன் ஜனாதிபதி மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்காக எத்தனையோ நல்ல அபிவிருத்தித் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றிவருகிறார் என்று அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன் நாட்டில் சுதந்திரக் கல்வி நிலைத்திருந்தால் மாத்திரமே ஜனாதிபதி அவர்களின் எண்ணப்படி இலங்கையை கற்றறிந்த அறிவாளிகள் வாழும் ஒரு கேந்திர மையமாக மாற்ற முடியும் என்றும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தால்தான் நாடு பொருளாதாரத் துறையில் வளம்பெறும் என்று தெரிவித்துள்ளார்.
ஆகவே மக்கள்,அரசாங்கம் தங்கள் கல்வி சுதந்திரத்தையும், வைத்திய வசதிகளையும் பறித்துவிடும் என்று அச்சம் கொள்ளத்தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment