Saturday, January 28, 2012

ஆணைக்குழு அறிக்ககைக்கு எதிராக கருத்துக்கூறிய டக்ளசை கண்டிக்காதது ஏன்? றங்கா

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லணக்கத்திற்கான ஆணைக்குழு ஈபிடிபி அமைப்பினர் யாழ் மாவட்டத்தில் மேற்கொண்டுள்ள பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பாக சுட்டிக்காட்டியிருந்ததுடன் அவற்றுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என சிபார்சு செய்துள்ளது. இது தொடர்பாக கருத்துரைத்த டக்ளஸ் தேவானந்தா ஆணைக்குழுவிற்கு எதிராக நீதிமன்று செல்லப்போவதாக கூறியிருந்தார்.

இந்நிலையில், அமைச்சராக இருந்து கொண்டு ஆணைக்குழுவின் பரிந்துரையால் கோபப்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகத் தெரிவித்தபோது, ஏனைய அமைச்சர்களோ அரசோ அதனைக் ஏன் கண்டிக்கவில்லை என்ற கேள்வியை ஐக்கிய தேசியக் கட்சியினுள் இருந்து கொண்டு அரசிற்கு ஆதரவு வழங்கி வருகின்ற நுவரேலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறி ரங்கா எழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment