சீனாவின் கொன்சு பகுதியில் இலங்கையின் மூன்றாவது தூதரக அலுவலகம்
சீனாவின் பிரதான வர்த்தக தலைநகரான கொன்சு பகுதியில் புதிய இலங்கை தூதரக அலுவலகம் ஒன்றை திறக்க சீனா இலங்கைக்கு அனுமதி அளித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே சீனாவில் இரண்டு இலங்கை தூதரக அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாவது தூதரக அலுவலகத்தை திறக்கும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான நல்லுறவு, பொருளாதார உறவு மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments :
Post a Comment