GTF கலந்து கொள்ளும் மாநாட்டில் அரசு கலந்துகொள்ளாது.
ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதில்லையென அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எல்ரிரிஈ ஆதரவு அமைப்பான குளோபல் டெமில் போரமுவிற்கு ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டதன் காரணமாக இதில் பங்கேற்பதில்லையென அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குளோபல் டெமில் போரம் அமைப்புடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் 4 பேரும் இம்மாநாட்டில் பங்கேற்பதாக தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இம்மாநாட்டில் பங்கேற்பதற்கு ஏற்கனவே தீர்மானித்திருந்த போதும் அம்முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வெளிவிகார அமைச்சு தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் சார்பில் இம்மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் கலந்து கொள்ளவுள்ளவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment