மலடி பிள்ளை பெற்றதாக அமெரிக்காவுக்கு கதை சொன்ன றொபேர்ட பிளேக்.
2007 மே மாதம் 21 ம் திகதி இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்திலிருந்து அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு இலங்கைக்கான அன்றைய அமெரிக்கத் தூதரும், தற்போது தென்கிழக்காசிய நாடுகளுக்கான ராஜாங்க திணைக்களத்தின் பிரதிச் செயலாளருமான றொபேர்ட் ஓ பிளேக் அனுப்பி வைத்த உள்ளகத்தகவல் ஒன்றில் டக்ளஸ் மற்றும் மட்டு மேயர் சிவகீதா தொடர்பான செய்தி ஒன்றை விக்லீக்ஸ் வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில், சிவகீதா பிரபாகரனுக்கு இன்னும் ஒரு பெயர் உண்டு. பத்மினி தேவானந்தா என்பது. இவர் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் ஆசை நாயகியாக இருந்தவர். இரு குழந்தைகளை டக்ளஸ் தேவானந்தாவுக்கு பெற்றுக் கொடுத்து இருக்கின்றார். குழந்தைகள் தேவானந்தாவுடன் உள்ளார்கள். தேவானந்தா தற்போது சிவகீதாவுடன் இல்லை என றொபேர்ட் ஓ பிளேக் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு செய்தி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு பிளேக் விளக்கு பிடித்து பார்த்தாரா என்ற கேள்விக்கு அப்பால் இவர் எவ்வாறான பொய்களை எல்லாம் இந்த உலகிற்கு சொல்லியுள்ளார் என்பதற்கு இச்செய்தி ஒன்றே சான்று பகர்க்கும் என நம்பப்படுகின்றது.
உலகிலே எத்தனையோ பேர் குழந்தைப்பாக்கியம் இல்லாமல் இருக்கின்றனர். அவ்வாறனவர்களில் ஒருவரே மேயர் சிவகீதாவும், அவர் அப்பாக்கியம் வேண்டி பல கோயில்களையும், வைத்தியர்களையும் தேடி அலைந்து திரிகின்றபோது, சிவகீதா பிள்ளைகளை பெற்று டக்ளசிடம் கொடுத்துள்ளார் என்ற பிளேக்கின் தகவல், பிளேக் உலகை மாத்திரமல்ல அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தையும் எவ்வளவு ஏமாற்றியுள்ளார் என்பதை எடுத்துக்காட்டுகின்றது.
யாழ்பாணத்திற்கு சென்றிருந்த றொபேர்ட் ஓ பிளேக்குக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்த மக்கள் 'நீ ராஜதந்திரியா அன்றில் பொய்சொல்லத் திரியும் மந்திரவாதியா' என எழுப்பியிருந்த கோஷங்கள் இவ்விடத்திற்கும் பொருத்தமானது எனக் கொள்ளப்படுகின்றது.
0 comments :
Post a Comment