Saturday, January 21, 2012

நீரிழிவு நோயாளர்கள் இலகுவாக காசநோயால் பாதிக்கப்படுவர்.

நீரிழிவு நோயாளர்கள இலகுவாக காசநோயால் பாதிக்கப்படுவதற்கான சாத்தியம் அதிகமுள்ளமை ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளதாக காசநோய் மற்றும் மார்பக புற்று நோய் தடுப்பு தேசிய செயற்திட்டத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்

இத்தகைய நோயாளர்களை இனங்காண்பதற்கான திட்டமொன்றை செயற்படுத்தியுள்ளதாக தெரிவித்த அவர் இதனுடன் தொடர்புடைய மருத்துவ பரிசோதனைகள் கொழும்பில் மூன்று நிலையங்களிலும் கண்டியில் இரண்டு நிலையங்களிலும் மேற்கொள்ளப்படுவதாகவும் இதற்கமைய நீரிழிவு நோயாளர்கள் காசநோய் பரிசோதனைக்கும், காசநோயாளர்கள் நீரிழிவு நோய் பரிசோதனைக்கும் உட்படுத்தப்படுவதாகவும் நீரிழிவு மற்றும் காச நோயாளர்களுக்கிடையில் உள்ள தொடர்பினை உறுதிப்படுத்துவதே இதன் நோக்கம் என தெரிவித்துள்ளார்



No comments:

Post a Comment