வேறு நாடுகளிலிருந்து கனிய எண்ணெய் கொள்வனவு குறித்து ஆராய்வு -அமைச்சர்
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஈரான் மீதான் பொருளாதார தடைக்கு அமைய ஜப்பான் மற்றும் கொரியா போன்ற நாடுகள் தற்போது ஈரானிமிருந்து மசகு எண்ணெய் கொள்வனவு செய்யும் நடவடிக்கையை இடைநிறுத்தியுள்ளன.
இலங்கையும் எண்ணெய் இறக்குமதியில் ஈரானை பெரிதும் நம்பியிருப்பதால் கனிய எண்ணெய் கொள்வனவு தொடர்பில் மாற்று வழிகளை ஆராய்ந்து வருவதாக கனியவளத்துறை அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். இதன்படி, ஓமான், சவுதிஅரேபியா, கட்டார் உள்ளிட்ட நாடுகளிலிருந்து கனிய எண்ணெய்யை கொள்வனவு செய்வது குறித்து ஆராய்ந்து வருவதாக அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நாளாந்தம் சுத்திகரிக்கப்படும் மசகு எண்ணெய ஈரானின் மசகு எண்ணெயினை சுத்திகரிக்கும் வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஈரான் மீதான் பொருளாதார தடைக்கு அமைய பொருளாதாரத் ஈரானுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் நாடுகள் மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு 6 மாதகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment