Tuesday, January 31, 2012

தொண்டமனாறு வெளிக்கள நிலையத்தை சொந்த இடத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை

தொண்டமனாறு வெளிக்கள நிலையத்தை மீண்டும் இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடமாகாண ஆளுநரின் உதவியுடன் இச்செயற்பாட்டை வல்வெட்டித்துறை நகர சபை மேற்கொண்டு வருகின்றது.உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 25 வருடகாலமாக இயங்காமல் இருந்த இவ்வெளிக்கள நிலையம் மாணவர்களின் விஞ்ஞான அறிவையும் வெளிக்கள பயிற்சி அனுபவங்களையும் மேம்படுத்தி கல்வியை தரமாக்குவதற்காக உருவாக்கப்பட்டதாகும்.

யுத்தத்தின் பின்னர் தற்காலிகமாக யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த இந்நிலையத்தை வடமாகாண ஆளுநரின் செயலாளரும் முன்னாள் கல்வியமைச்சின் செயலாளருமான இ.இளங்கோவனின் பணிப்பில் வல்வெட்டித்துறை நகர சபையினால் இது புனரமைக்கப்படவுள்ளது.

இதற்காகதொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலயத்தினால் வழங்கப்பட்ட 48 லட்சம் பெறுமதியான காணியில் கடந்த செவ்வாய் கிழமை இதற்கான முதற்கட்டபணிகள் ஆரம்பமாகியுள்ளன.

இதற்கான நிதியினை தொண்டமனாறு வெளிக்கள நிலையத்தின் முன்னாள் ஆலோசகர் சரத் கொட்டகோட வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com