Friday, January 20, 2012

தொழிலாளியின் சடலத்தை சாலையோரத்தில் வீசிய முதலாளிக்கு எதிராக வழக்கு

சிங்கப்பூரில் தன்னிடம் வேலைசெய்த வெளிநாட்டவரான தொழிலாளி ஒருவர் இறந்ததை அடுத்து அவரின் உடலை சாலையோரத்தில் வீசிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இப்பாதகச் செயலை மேற்கொண்ட முதலாளி மீது நேற்று சிங்கப்பூர் கீழ்நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

டே கோக் எங், 56, என்னும் அவர் மீது சட்ட விரோதக் குடியேறியை வேலைக்கு அமர்த்திய குற்றச்சாட்டும் சுமத்தப் பட்டது. 'மிடாஸ் மெய்ன் டனன்ஸ் அண்ட் சர்வீசஸ்' நிறுவனத்தை நடத்தி வந்த அவர் மீதான குற்றம் நிரூ பிக்கப்பட்டால், சட்டவிரோத மாக சடலத்தைக் கிடத்திய குற்றத்திற்கு ஆறு மாதம் வரையிலான சிறை, SD 2,000 அபராதம் ஆகியன விதிக்கப் படலாம். சட்ட விரோதக் குடி யேறியை வேலைக்கு அமர்த் திய குற்றத்திற்காக ஆறு மாதம் முதல் 2 ஆண்டுகள் வரையிலான சிறையும், கூ6,000 அபராதமும் விதிக்கப் படலாம்.

இதேநேரம் சிங்கப்பூர் சிறையில் முன்னாள் முழுநேர போலிஸ் தேசிய சேவையாளர் ஒருவருக்கு பல்வேறு குற்றங்களுக்காக நேற்று 18 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கீழ் நீதிமன்ற போலிஸ் காவல் அறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி ஒருவருக்கு சிகரெட்டை பதுக்கிக்கொண்டு போய் தருவதற்காக லஞ்சம் பெற்ற குற்றமும் அவற்றில் அடங்கும்.

சுலைமான் ஃபிர்டவுஸ், 23, எனப்படும் அவர் இச் சம்பவம் நடைபெற்ற காலத்தில் கீழ் நீதிமன்றங்களுக்கான சிறப்பு கான்ஸ் டபிளாகப் பணியாற்றினார்.

2008 ஆம் ஆண்டு மே, ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட நாளில் 'தாமஸ்' என்று மட்டும் தெரிவிக்கப்பட்ட விசாரணைக் கைதி ஒருவரிடம் நேசம் ஏற்பட்டு இருவரும் கைபேசி எண்களை பரிமாறிக்கொண்டார்கள்.

பின்னர் 'ராஸ்' என்பவரிட மிருந்து சுலைமானுக்கு கைபேசி அழைப்பு வந்தது. அந்த அழைப்புக்குப் பின்னர் சுலைமான், மற்றொரு விசாரணை கைதிக்கு புகையிலைப் பொட் டலம், சிகரெட் ஆகியவற்றைக் கொடுத்ததாக விசாரணையில் தெரியவந்தது.

No comments:

Post a Comment