Sunday, January 1, 2012

ஜே.வி.பி. தலைவராக மீண்டும் சோமவங்ச

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவராக சோமவங்ச அமரசிங்க மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் மத்திய செயற்குழுவுக்காக புதிதாக 11 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை திஸ்ஸமகாராம தெபரவௌ விளையாட்டு மைதானத்தில் இன்று இடம்பெற்ற வருடாந்த மாநாட்டிலேயே இந்த தெரிவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் செயற்குழுவின் உறுப்பினர்களாக 25 பேரும் தெரிவு செய்யப்பட்டனர். ரில்வின் சில்வா, அனுரகுமார திசாநாயக்க, விஜித்த ஹேரத், லால் காந்த, பிமல் ரத்னாயக்க, சுனில் ஹந்துன்நெத்தி, ஜினதாச கித்துல் கொட, ராமலிங்கம் சந்திரசேகரன், லக்ஷ்மன் நிபுன ஆராய்ச்சி, நிஹால் கலபதி, சமந்த வித்யாரத்ன, காமினி ரத்னாயக்க வசந்த பியதிஸ்ஸ, சுனில் வடகல, சமன்மலி குணசிங்க, எச்.ஜி தம்மிக்க, சந்திரிக்கா அதிகாரி, சமந்த கோரலே ஆராச்சி, சுமத்திபால மானவடு, டி.எம் அபேரத்ன, மஹிந்த ஜயசிங்க, நலிந்த ஜயதிஸ்ஸ, சிசிர குமார வாசல ஆகியோரே செயற்குழு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களாவர்.

இது வரை மத்தி செயற்குழுவில் அங்கத்துவம் வகித்த 9 உறுப்பினர்கள் இம்முறை தெரிவு செய்யப்படவில்லை. சேர்ந்த ஜி. குலரத்ன, புபுது ஜாகொட, திமுத்து ஆட்டிகல, திமுத்து அபேகோன,; வருண ராஜபக்ஷ, துமிந்த நாகமுவ, சமிர கொஸ்வத்த, எஸ்.கே சுபசிங்க, மற்றும் அஜித் குமார சிங்க ஆகியோரே செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டவர்களாவர். இவர்கள் புரட்சிக்குழுவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, புதிய உறுப்பினர்கள் தெரிவின் படி,கட்சியின் பிரதான செயலாளர், பிரசார செயலாளர் உள்ளிட்ட முக்கிய பதவி நியமனங்கள் எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ளன.

No comments:

Post a Comment