பயங்கரவாதத்தை எதிர்க்கும் நாடுகளில் அதனை ஊக்குவிக்கும் முத்திரைகள்.
எல்ரிரிஈ முத்திரைகளை ஒரு சில நாடுகள் விநியோகிப்பது சர்வதேச தபால் சட்டத்தை மீறிய செயல் என விமர்சனங்கள் எழுந்துள்ளது. பிரிட்டன் பிரான்ஸ் கனடா போன்ற நாடுகள் எல்ரிரிஈ முத்திரைகளை வெளியிட்டுள்ளன சர்வதேச தபால் சங்க சட்டங்களின் பிரகாரம் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பது தொடர்பான முத்திரைகளை விநியோகிக்க முடியாதென தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் இலங்கை தபால் திணைக்களம் பிரான்ஸ் தபால் சேவைக்கு இலங்கையின் ஆட்சேபனையை உத்தியோகபூர்வமாக தெரிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எம்.கே.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
எல்ரிரிஈ அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்ட இயக்கமாகும். அது போன்றதொரு அமைப்பின் இலட்சனை கொண்ட முத்திரைகளையோ அல்லது வேறு ஏதாவது பொருட்களையோ பயன்படுத்துவது சட்டவிராதமாகும்.
ஐரோப்பிய நாடுகள் பல எல்ரிரிஈ அமைப்பை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்துள்ளது. அது போன்றதொரு தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆதரவளிக்கும் விதத்தில் முத்திரை வெளியிடுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது ஜனநாயக விரோத போக்கான செயல் எனவும் இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment