Sunday, January 8, 2012

விடத்தல்தீவில் வெடி பொருட்கள் மீட்பு.

மன்னார் விடுத்தல் தீவு பெரியமடு வனப்பகுதியில் மறைத்து வைக்கபட்டிருந்த ஒரு தொகுதி வெடி பொருட்கள் மன்னார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளை தொடர்ந்து இவ் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

60 மில்லி மீட்டர் மோட்டார் குண்டுகள் 14 , 81 மில்லி மீட்டர் மோட்டார் குண்டுகள் உட்பட பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக மன்னார் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் வழங்கிய தகவலையடுத்து நேற்று இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின் போதே இவ் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com