Tuesday, January 10, 2012

யாழ்.மாநகர சபைக்கு எதிராக பொலிஸார் வழக்குத் தாக்கல்!

யாழ் மாநகர சபைக்கு எதிராக யாழ்ப்பாண பொலிசார் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். யாழ் மாநகர சபை பொது சுகாதாரப் பகுதியினர் யாழ் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வடிகால்களை சீரமைப்பதில்லை எனவும் கழிவுகளை ஒழுங்காக அகற்றுவதில்லை எனவும் இதன் காரணமாக டெங்கு தாக்கம் அதிகரித்து வருவதாக குற்றச் சாட்டுக்களை முன் வைத்து யாழ் நீதவான் நீதிமன்றில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மாநகரசபையின் மேயருக்கும் அவரது கட்சியை சேர்ந்தோருக்குமிடையே போட்டிகள் நிலவி வருகின்ற நிலையில் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த வழக்குத்தொடர்பாக யாழ் மாநகர சபை இன்று யாழ் நிதவான் நீதிமன்றில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com