Tuesday, January 24, 2012

'விழுது' தலைமை அலுவலகம் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

கொழும்பு 07, டொரிங்டன் அவனியூவில் அமைந்துள்ள 'விழுது' ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் தலைமை அலுவலம் இன்று காலை இனந் தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக அங்குள்ள பொருட்கள் மற்றும் கட்டிடத்துக்கு பாரியளவிலான சேதம் ஏற்படுத்தப்பட்டுள்‌ளது. இதுகுறித்து கறுவாத்தோட்ட பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெண்கள் உரிமைக்காக கடந்த 8 ஆண்டுகளாக அரச சார்பற்ற நிறுவனமாக இயங்கிவரும் இந்நிறுவனம் நாட்டின் பல பிரதேசங்களிலும் கிராமிய மட்டங்களில் பெண்களின் உரிமைகள் தொடர்பாக பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

'இருக்கிறம்' பத்திரிகையும் அதே அலுவலகத்தில் இயங்கி வந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வடக்கு கிழக்கில் இலவச சட்ட உதவிகளை வழங்கிவரும் விழுது நிறுவனம் ஊடக கற்கை நெறிகளை நடத்துவதுடன் ஆசிரியர்களுக்கான அகவிழி, மற்றும் பெற்றோர்களுக்கான கல்லூரி சஞ்சிகைகளையும் வெளியிடுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com